நினைவுகளில்

நம் நினைவுகள் விளையாடும்
தேடலற்ற கண்ணாமூச்சியில்
இருவருமே தொலைந்து போகிறோம்
பின், ஒருவராய் அகப்படுகிறோம் ஒருவருக்குள் ஒருவராய்.

என் நினைவுகளில் உறங்கியவாறு நீ பாடும் தாலாட்டு
என்னை விழித்திருககச் செய்து
என் உறக்கத்திற்கு உருப்படியான ஓய்வு கொடுக்கிறது

எனது பெயர் கொண்ட ‘காணவில்லை’ அறிவிப்பு
உனது புகைப்படத்துடன் பிரசுரமாகிறது .

உனது தூங்கும் குழந்தையை
விளையாடும் உன் குழந்தை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

ஒலிகள் ஒளிர்கின்றன
ஒளிகள் ஒலிக்கின்றன.

எழுதியவர் : யேசுராஜ் (1-Oct-19, 11:17 am)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : nenaivugalil
பார்வை : 257

மேலே