தமிழ்மொழி
தமிழ் மொழியே தமிழ் மொழியே!-எங்கள்
தமிழ் மொழியே தமிழ் மொழியே!
நேற்று இன்று நீ பிறந்தது இல்லை!-தமிழே!
நாளை என்றும் நீ மறைவது இல்லை!
காலம்காலமாய் தேய்வது இல்லை! -தமிழே
காலம் கடந்தும் நீ ஓய்வது இல்லை !-
கம்பன் வீட்டுக் கட்டு தறினிலும்
வள்ளுவன் கொண்ட கை ஏட்டினிலும்
ஓங்கி நின்ற என் தமிழ் மொழியே!
பாரதியின் மூச்சினிளே
சின்ன சிறு குழந்தை பேச்சினிளே
வன்மை இல்லா வெண்மை கொண்ட
எங்கள் செம்மொழியே!
வண்ண மயிலும் ஆடிவிடும்
கொஞ்சும் குழந்தையும் பேசையிளே!
வஞ்சம் ஏதும் இல்லாமல் தூய நெஞ்சம் கொண்ட எங்கள் தாய் மொழியே!