அன்பே எங்கு சென்றாய்

விழிப் பாதங்களால்
என்னை உதைத்தாய்
இதழ்களால் பூ விரியக்
கதைத்தாய் வதைத்தாய்
என்னில் ஏதோ
ஒன்றை விதைத்தாய்
நீ மறைந்தாய்
ஆனாலும் உன்விதை
உறையவும் இல்லை
மறையவும் இல்லை
மரமாய் வளர்ந்து
நெஞ்சில் உன்னை
வேராய் பாய்ச்சி
இங்கு என்னைப்
பாடாய்ப் படுத்துதடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (1-Oct-19, 11:47 am)
பார்வை : 322

மேலே