அழிமதி மது
சாலையோரம் சாரைசாரையாய் கூட்டம்
மது அரக்கனின் எக்களிப்பு..!
அழிமதி மதுவில் வீழ்ந்த
வீணர் வீதியில் புரள..!
ஆலோபம் கொண்ட வீடோ
விதிநொந்து விசும்பலில்..!
அன்று ஊருக்கோர் பாடசாலை
கல்வியில் தழைத்த தலைமுறை..!
இன்றோ வீதிக்கோர் மதுக்கடை
மதியிழந்து நிற்கும் அவலம்..!
மதுவில் மூழ்கி மனிதம் சிதைத்து...
பொதுநலம் அற்று...
அன்பு கொன்று நெஞ்சம்
முழுவதும் வஞ்சம் கொண்டு...
உணர்ச்சியற்ற பிணமாய்...
உலாவரும் மனிதா..
வீயாது வந்த விழுமம்
அடும் மதுவே அறிவாயா..?
கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும்
கொடியவனின் பிடியில் சீரழிவது நீ மட்டுமா?
உன் உறவுகளும்
உனை தாங்கி நிற்கும் சமூகமும்தானே!
அவலன் யாரென்று உணர்ந்தாயா..?
கொடுந்துயர் மாற்ற முனைவாயா..?
நாளைய விடியல்
மதுவில்லா நம் தலைமுறைக்காக ..!