உ முதல் எழுத்துப் போட்டி

உழவன் வாழ்க்கை
கேள்விக் குறியானதே /
உழவருக்கு இயற்கையும்
ஏனோ ?எதிரியானதே /
உள்ளக் குமுறலோடு
புலம்பச் செய்ததே /

உரமிட்டு நீர்
இறைக்க வழியில்லை/
உதவிக்கரம் நீட்ட முன்
வருவோரில்லை/
உதாசீனம் செய்கிறது
பணக்கார வர்க்கம் /
உண்மையை உரைக்கையிலும்
செவிசாய்க்க யாருமில்லை /

உரலும் உலக்கையும்
இல்லத்திலே உண்டு /
உரக்கச் சொல்லவா?
அண்டாவிலே நெல்லில்லை/
உலகிக்கே உணவளிப்பவனோ
உணவின்றிப் பட்டினியிலே/

தேர்வுக்கு மிக்க நன்றிகள் 😊❤🙏🙏

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (3-Oct-19, 12:34 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 88

மேலே