கீழடி சுழற்றும் சவுக்கடி
மரத்திலிருந்து தாவிதாவி
மந்தி கூட்டம் வாழ்ந்து வந்த
கதையை சொல்கிறேன் கேளைய்யா
சிரத்தில் மயிர் வந்தபின்பு
சிறப்பு அந்தஸ்த்து வந்ததென்று
சிரிக்க தொடங்கிற்று மனிதனென்று
நெருப்பு மூட்டி இருளை விரட்ட
நேரே வானம் குளிரையூட்ட
உறையுள் என்றான் வீடுக்கொண்டு
உறுப்புத்தெரிவது உணர்ந்தப்பின்பு
உடுத்த இலையை உடையாய்நெய்து
அடுத்த நிலைக்கு அடிவைத்தான்
நடந்து போனால் நாட்களாகும்
நொடிந்து போகும் கால்களெல்லாம்
கடந்தோடும் சக்கரத்தை
கண்டுபிடித்தான் முதலிலே
உயிர்களெல்லாம்ஓசையெழுப்ப
உற்றுநோக்கி பார்த்த பின்பு
உடனிருந்த பசுவைப் போல்
அம்மா என்றான் அடிவயிற்றில்
ஐந்தறிவு அஃறிணைபின்
ஆறாமறிவு வருகிறது
அம்மா என்கிற தமிழினமே
அகிலத்தில் முதலாய் வந்திருக்கும்
உலகே சற்று பொறுத்திரு
உனக்கும் எனக்கும் தெரியாது
நிலவில் கூட தமிழிணம் நீண்டகாலம் வாழ்ந்திருக்கலாம்
தமிழன்,
காலடி படாத நிலமில்லை
கடல்மூடி போனாலும் உய்வில்லை
கீழடியோடிது முடியாது- வருமே
தோண்டத்தோண்ட அவன் வரலாறு