ஒரு நடுத்தரனின் கண்ணீர்
சொல்லாத சோகங்கள்
நெஞ்சோடு ஏக்கங்கள்
முடிவில்லா ஆசைகள்
மூச்சு திணறும் பயணங்கள்
இன்றோ நாளையோ
நாளை மறுநாளோ
விடியும் நம்மால் முடியும்
என வீண் நம்பிக்கைகள்
பெரும்பாலும் கனவுகள்
கலைவதில்லை சுமக்க படுகின்றன
ஏதோ ஒரு சூழ்நிலையில்
தொலைக்கிறோம் தெரிந்தே
கனவுகளையும் நம்மையும்
கனவு காணுங்கள் என சொன்ன
கலாமுக்கு தெரியாது
நடுத்தர குடும்பஸ்தன் படும்பாடு
எது விலை ஏறினும்
ஊதியம் மட்டும் ஏறாமல்
எல்லாமே அடங்க வேண்டும்
சொல்லப்படாத நிபந்தனை
அடக்கிட நினைத்து
அடங்கி போவோர் பலர்
அடக்கம் ஆவோர் சிலர்
அடுக்கடுக்காய் அடுக்க
மறப்பதில்லை கனவுகளை
மட்டும் நாம் ....