நம் வாழ்க்கை முடிந்து போனால்
நன்றாக உறங்கி நாட்கள் பல
நன்றாக உண்டு நாட்கள் பல
நன்றாக சிரித்து நாட்கள் பல
நன்றாக பேசி நாட்கள் பல
ஏதோ யோசனையில்
ஏதோ செய்கையில்
ஏதோ வேடிக்கையில்
ஏதோ வேதனையில்
போனது போகட்டும்
ஆனது ஆகட்டும்
இனியாவது வாழலாம்
இயல்பாய் என நினைக்கையில்
ஏதோ பயம் மனதில்
நம் வாழ்க்கை முடிந்து போனால் ...????