எண்ணமும் புரிதலும்

எண்ணங்கள்

வெண்பா

எண்ணங்கள் ஆயிரம் எண்ணுவர் மானிடர்
எண்ணித் துணிதல் சிறப்பென்றார் --- வண்ணவண்ண
எண்ணம் எடுத்துரைப்பர் குப்பையே எண்ணியபின்
எண்ணம் வழுவ யிழுக்கு

புரியாப் பரிந்துரை வேண்டா புரியாப்
புரிதல் இழுக்கைத் தருமாம் ---புரியப்
புரியத் தெரிதல் இடும்பைத் தருமே
புரியப் புரிதல் நலம்

மனிதனின் எண்ணங்கள் மாறி மாறி ஆயிரமாயிரம் வந்து துன்புறுத்தும். ஆகவே
ஆராய்ந்து எது சரியோ அதைத் துணிந்துது செய்திடல் வேண்டும். பலரின்
அறிவுரைகளும் குப்பையாக இருக்கலாம்.. அதேசமயம் நல்லதைத் தேர்ந்து பின் அந்த
எண்ணத்தை கைவிடல் பிறர் கேவலமாய்ப் பேச வழி செய்யும்.


எந்தத் தொழிலைலையும் என்னவென்று தெரிந்து கொண்டு (புரிய. = செய்தல்)
புரிய வேண்டும். புரியா தொழிலுக்கு பரிந்துரையும் செய்தல் கூடாது. அது எந்தத் தொழில்
என்று தெரியாமல் புரிதல் (செய்தல்) கேவலத்தில் முடியும். அதேபோலப் போகப்போக
தெரிந்துகொள்ளலாம் என்று என்ன செய்கிறோமென்று தெரியாது ஒருவர் கொடுக்கும்
தொழிலில் ஈடுபடுதல் துன்பத்தில் முடியுமாம்

எழுதியவர் : பழனிராஜன் (12-Oct-19, 12:36 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : ennamum purithalum
பார்வை : 183

மேலே