காதல்
மலர்ச்சோலை அதில் பூத்த மலர்கள்
எத்தனையோ அவை ஒன்றுக்கொன்று
மனதில் 'அவள் கூந்தலை அலங்கரிக்க'
எண்ணி நிற்கையில் முந்திக்கொண்டது
சிவப்பு ரோசா ஒற்றைப்பூவாய் அவள்
பின்னிய கூந்தலை அலங்கரிக்க ஏங்கி
தவித்தன எண்ணியே வீணா இருந்த மற்றப் பூக்கள்.....