அறியாயோ மனமே

துடியாய்த் துடிக்கின்றேன் /
மடியாமல் மடிகின்றேன் /
துயிலாமல் விழிக்கின்றேன் /
மரண வாசல் தேடுகின்றேன் /

ஓலமிட்டுப் புலம்புகின்றேன் /
ஓடாகத் தேய்கின்றேன் /
கார் மேகமாக அழுகின்றேன் /
வெண்முகிலாக அழைகின்றேன்/

பஞ்சாய் எரிகின்றேன் /
உப்பாய்க் கரைகின்றேன் /
மெழுகாய் உருகுகின்றேன் /
காற்றாய் உனைத் தேடுகின்றேன் /

ராக்கோழியாகவே நான் போனேனடி/
ரங்கோழிச் சேலைக் காரியே/
என் ஆவியே நீ தான்/
என்று அறியாயோ பெண் மனமே/

தேர்வுக்கு மிக்க நன்றி 😊❤🌹

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (12-Oct-19, 1:24 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 173

மேலே