காதல் வலிக்குதடி
உன் விழிகளினால்
பேசிடும் மொழிகளினை
வாசிக்க தெரியாத
தத்து கவிஞன் நான்
விழிகளால் களவாடி
மனதோடு உறவாடி
என்னை தொலைக்க வைக்கும்
நீ காதல் சதிகாரி ...
உயிராய் உன்னை நினைத்து
அதில் பயிராய் காதல் வளர்த்து
அறுவடை நாளன்று
அடித்து செல்லும் வெள்ளம் போல்
நம் ஜாதி இங்கு
பிரிவினை நினைக்கையில் தான்
விஷத்தை விழுங்குவதுபோல்
நிஜமாய் கணக்குதடி
காதல் வலிக்குதடி
என்னுள் காதல் வலிக்குதடி