அவளும் அல்லிப்பூவும்

அந்தி சாய் வேளை, முன்னிரவு
வானும் இருண்டது சீக்கிரமே
தேய்பிறை இந்துவும் வானில்
வாராது போக இன்னும் வாடிய
அல்லிப்பூக்கள் மொட்டவிழாது
இந்துவின் வரவிற்கு ஏங்க- எங்கிருந்தோ
வந்தாள் மண்ணின் முழுநிலவாய் அவள்
கூம்பிய அல்லி இதழ்களெல்லாம் ஆனந்தத்தில்
விரிந்து அவளை வரவேற்க , மங்கை அவள்
தடாக நீரில் கால் நனைத்து குளிர் ஏற்று
நீண்ட அழகிய கரங்களின் இதழ்போன்ற
விரல்கொண்டு அல்லி மலரொன்று கொய்தாள்
கன்னத்தில் வைத்து அனுபவித்தாள்
சிவந்த அல்லியாய் மாறியதே கன்னங்கள்
இவளே மதியென்று ஏமார்ந்து அல்லியும்
தன்னை அவள் முகத்தில் சரணடைய

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Oct-19, 12:10 pm)
பார்வை : 102

மேலே