நீ தானே யாவும் நீ தானே

மல்லிகை மலராய் உடலால் மணப்பவளே
முல்லை கொடியாக என்னில் படர்பவளே
நெல்லை ஹல்வாவாய் நின்று இனிப்பவளே
எண்ணும் எழுத்தும் படித்த காலம் முதல்
இன்னும் நீதான் என்னுள் கிடக்கின்றாய்
கண்ணுக்குள் நிலவாக காலமெல்லாம் வாழ்பவளே
மண்ணுக்குள் வேராக படர்ந்து விடு என் மனத்தில்
தாகம் தணிக்க பருகும் நீர் போலே
வாழ்வின் பாகமாய் ஆனவளே எனை ஆழ்பவளே
ஆல் போல் வேரூன்றி அறுகு போல் தழைக்கும்
எப்போதும் இருவரும் இணை பிரியா வாழ்வமைக்க
கால்கோள் கொள்வோமா கனிவாய் இருப்போமா

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (12-Oct-19, 12:04 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 492

மேலே