இது நட்புக்காக-பெண் அழகு
நாடு கடந்து நாடு வந்து நான்
தனித்து நின்று தவித்த வேளையில்
நானும் உன் போல் நாட்டிற்கு புதிது என
நட்பாய் வந்து இணைந்தாள் அவள்
அமைதியின் உருவம் அவள்
அதிர்ந்து என்றும் பேசியதில்லை அவள்
யாரிடமும் நெருங்கியதில்லை அவள்
யாரையும் வெறுத்ததும் இல்லை அவள்
நட்பின் எல்லை நன்றே தெரிந்தவள் அவள்
அறிவும் ஆற்றலும் கொண்டவள் அவள்
புரிந்துகொண்டு பரிவு தருவாள் அவள்
முயற்சியை என்றும் விட்டதில்லை அவள்
வெற்றியை காணாது ஓய்ந்ததும் இல்லை அவள்
சேயாய் மகளாய் தாயாய் தாரமாய் என
அத்தனை பரிமாணங்களும் கொண்டாள் அவள
இதற்கு மேலும் வேறு ஏதேனும் உண்டா
எடுத்து வா என்னிடம் என கேட்பாள் அவள்
தீப்பொறியாய் இருந்த என்னை
சிறு தீச்சுடராய் ஒளிர வைத்தாள் அவள்
ஊக்கம் கொடுத்து ஏற்றி விடுபவள் அவள்
உடன்பிறவா உடன்பிறப்பென ஆனாள் அவள்
அறுவரில் முதலாய் பிறந்தாள் அவள்
வீட்டின் நல்முத்தாய் வந்தாள் அவள்
தந்தையுடன் தன் மன்னவனுக்கும்
யோகங்கள் சேர்க்கும் ராணி அவள்
அவள் தான் என் ப்ரியமான தோழி!!
-உமா