என் பங்குக்கு ஆகாசம்பட்டு பாணி வெண்பாக்கள் 6

நேரிசை வெண்பா

ஆத்தோட பேசத்தான் கூழாங்கல் லுக்காசை!
ஆத்துக்கோ பாறாங்கல் லோடுபேச! – ஆத்தாடி!
அந்தக்கல் லுக்கோ கரையோரப் பூவோட
அந்தரங்கம் பேச அவா! 11 - ஆசிரியர் சேஷாசலம்

ஐ.நா. சபையிலும் பாஸான தீர்மானம்
நைனா சபையில் நவுராது! – பொய்சொல்லி
பாட்டனி ரெக்கார்டுக் குன்னு பணம்வாங்கி
மேட்டனிக்குப் போகமுடி யாது. 12 - ஆசிரியர் சேஷாசலம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-19, 10:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே