என் பங்குக்கு ஆகாசம்பட்டு பாணி வெண்பாக்கள் 7

நேரிசை வெண்பா

ஆத்திரத் தையும் அடக்கலாம்; ஒன்னால
மூத்திரத் தையா முடியுமோய்? - காத்திருந்து
உட்காந்தா பஸ்டாண்டில் குத்தகைக் காரரே
சட்டையை யாபுடிச்சீர்? சட்! 13 - ஆசிரியர் சேஷாசலம்

ராஜா மொதவரி; ரோஜா அடுத்தவரி;
கூஜாவா? போடுநீ தாஜாவை! - பேஜார்!
எனிமா குடுத்தாலும் எந்தமிழ் நாட்டில்
சினிமாசாங் மாறாது சீ! 14 - ஆசிரியர் சேஷாசலம்

நேரிசை வெண்பா

வேண்டாம்ஓய் பங்காளிச் சண்டை; நிறுத்துடா!
போண்டா முகத்தனாம் பொல்லாத – கோண்டுநீ!
சொன்னாக்கேள் அண்ணந்தம் பிக்குள்ள ஒத்துப்போ!
என்னாச்சு ஒம்புத்தி ஏய்? - வ.க.கன்னியப்பன் (ஆகாசம்பட்டு பாணி வெண்பா)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-19, 10:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 92

மேலே