செவப்பி - அத்தியாயம் 18 இறுதி அத்தியாயம்

செவப்பி - அத்தியாயம் 18 (இறுதி அத்தியாயம்)
==============================================

     பண்ணையாரு வீட்டுக்கு வந்தவுடனே, நடந்த விஷயத்த‌ ஒன்னு விடாம கொட்டினா கற்பகம்..

     அத்தனையும் கேட்ட பண்ணையாரின் கண்களில் நீர்த்துளி லேசாய் எட்டிப்பார்த்தது.

     "செவப்பிய சாமியாவே கும்பிடறவங்க, இந்த ஊர்ல ரொம்ப பேர் இருக்காங்க.. அவங்களையெல்லாம் வரவழைச்சுப் பேசி, 'செவப்பியம்மா"ங்கற பேர்ல ஒரு கோவில் கட்டுங்கனு சொல்லலாங்க, அதுக்கு அதிகபட்சமா நாம செலவு பண்ணலாம், என்ன உங்களுக்கு சம்மதம் தானே?"

     தலையை வேக வேகமாக சரி சரி என தலையை ஆட்டிய‌ பண்ணையாரைக் கண்ட செவப்பி.. அங்கே தான் நின்று கொண்டிருந்தாள்.

     அவளுக்கு அப்படி ஒரு பூரிப்பு...

     'சரி.. நான் எதுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு, மறுபடியும் இங்க வந்தேன்'

     'சரி.. தேன்மொழியைத் தேடலாமென யோசித்தபடி கிளம்பினாள் செவப்பி...

     அதே நேரம்.. தேன்மொழி...

     சென்னையில் தான் இருந்தாள்.. ரொம்பவும் மாடர்ன் பெண்ணாக, உயர் தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள்..
 
      நன்றாகப் படித்து நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு, அதை சந்தோசமாக செலவழித்தும் கொண்டிருந்தாள்.

     அவளைக் கண்டதும் தனது லீலையை ஆரம்பித்தாள் செவப்பி..

     அவள் போன காரை பஞ்சராக்கி நடக்க வைத்தாள்,  அதே பாதையில் ரகுவை வரும்படி வைத்தாள். அவன் வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஹெல்மெட் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் பார்க்காமல் ஸ்ரைக்டாக போனவனை ஒரு அழகான கை வழிமறித்தது.

     வண்டி சட்டென ஆஃப் ஆனது. அப்போது தான் பார்த்தான் முன்னே நின்று கொண்டிருந்தவளை..

     ஒரு விநாடி "செவப்பி" எனக் கூப்பிடப் போனவன், பின் பின் சுதாரித்து "தேன்மொழி" எனக் கூப்பிட்டான்.

     தேன்மொழியும் அப்போது தான் பார்த்தாள்.. அவளுக்கு முன்னே நிற்பது 'ரகு' என்று..

     "ஏய் ரகு.. எங்க இங்க..?"

     "ஹே தேன்மொழி.. நான் இங்கத்தான் ரொம்ப நாளா வேலை பாத்துட்டு இருக்கேன்.."

     "ப்பா... பார்த்து எத்தனை நாளாச்சு... சூப்பர்.. சரி உட்காரு.. கேள்விப் பட்டிருப்பேனு நினைக்கிறேன்"

     "ஆமாம்.. நானும் கேள்விப்பட்டேன்.. ச்சே எப்படி வாழ்ந்தவ..!"

     இப்படியாக அவர்களது பயணம் ஆரம்பமானது..

     இது நிச்சயம் காதலில் முடியும் என்ற நம்பிக்கையோடு அப்படியே காற்றோடு காற்றாய் கலந்து காணாமல் போனாள்....

செவப்பி...!!!

(முற்றும்)

பின்குறிப்பு: தொடர்ந்து படித்து ஆதரவு அளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி..

மிக்க நன்றி....

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Oct-19, 11:03 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 113

மேலே