புருசன் பொண்டாட்டி பேரையா வைக்கிறது

டேய் சின்னப்பையா நீயும் உன்னோட பொண்டாட்டி பொன்னுத்தாயும் கொழந்தை வரம் வேண்டி அஞ்சு வருசம் தவம் இருந்தீங்க. ஆண்டவன் புண்ணியத்தில இரட்டைக் கொழந்தைங்க பொறந்திருக்கிறாங்க. சந்தோசமா?
@@@@@@
ரொம்ப சந்தோசம் பாட்டிம்மா. மகாலட்சுமி மாதிரி பொண்ணு. அந்த கைலாசநாதன் மாதிரி பையன். நாங்க செஞ்ச வரம் பாட்டிம்மா.
@@@@@@
சரி. ரண்டு கொழந்தைங்களுக்கும் பேருங்கள முடிவு பண்ணிடீங்களா.
@@@@@@@@
நானும் பொன்னுத்தாயும் ஒரு படம் தவறாம பாக்கிறவங்க. அதனால பொண்ணு ஜோதிகா.
@@@@@@
என்னது சோதிக்காவா? ஏன்டா சாதிக்கா, பீக்கங்கா, சொரக்கா, அவரக்கான்னேல்லாம் காய்கறி பேருங்கதான் நமக்குத் தெரியும். உம் பொண்ணுக்கு ஒரு காயிப் பேரையா வைக்கப்போறீங்க? இந்தி சோதிக்கா எங்கடா வெளையுது?
@@@@@@@
'ஜோதிகா' காய் பேரு இல்ல. வடக்க இருந்து தமிழ் சினமாவில நடிச்சு பிரபலமான நடிகை.
@@@@@@
ஓ....சினிமாக்காரி பேர. நீங்கெல்லாம் சினிமாவால சீயழியறவங்கதானே. சரி பையன் பேரச் சொல்லுடா சின்னப்பையா.
@@@@@
பையன் பேரு 'சூர்யா'
@@@@@@@@
என்னது சூரியாவா? சூரியை(ஒரு வகைக் கத்தி) வச்சுத்தான்டா ஆட்டுத்தோல உரிப்பாங்க. அந்த சூரி பேரையா கொஞ்சம் மாத்தி பையனுக்குப் பேரா வச்சிருக்கிறீங்க?
@@@@@@@
அந்தச் சூரி இல்ல பாட்டிம்மா. சூர்யா சூரியனக் குறிக்கிற பேரு. சூர்யாவும் பிரபல சினிமா நடிகர். அவர் ஜோதிகாவோட புருசன்.
@@@@@@@
காலம் கெட்டுப் போச்சுடா சினிமா பைத்தியங்களா. புருசன் பொண்டாட்டி பேரையா அண்ணன் தங்கச்சிக்கு வைக்கிறதா?
உங்க ரசனைய மொத்துனாத்தான்டா சரிப்படும். மருகாதியா வேற நல்ல இந்திப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வச்சிருங்க. தமிழ்ப் பேருங்கள வச்சா நம்ம தமிழ் சனங்க நம்மளை மதிக்கமாட்டாங்கடா.
@@@@@@@
சரி சரி. நம்ம சோசியகாரரைக் கேட்டுட்டு புதுமையான இந்திப் பேருங்கள பிள்ளைங்கள வச்சிடலாம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Jyothika = lamp, flame.

எழுதியவர் : மலர் (20-Oct-19, 12:35 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 153

மேலே