கண்ணம்மா

💐கண்ணம்மா💐

அந்த விலை உயர்த்த கார் அங்கே நிற்க காரணம், அவன் உடல் உபாதை தான். ஓரமாக நிறுத்திய காரில் இருந்த இறங்கியவன் , வேகமாக ரோட்டின் இடது பக்கம் இறங்கி ஓடினான். ஒரு வழியாக செடிக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு மீண்டும் தன் காருக்கு திரும்ப முயன்ற அவனை அந்த அற்புதமான இயற்கை சூழல் மயக்கியது. கிட்டதட்ட அது ஒரு காலை நேரம். கதிரவன் தன் முகம் காட்டும் நேரம் அது. அவன் இன்னும் கொஞ்சம் அந்த இடத்தில் இருந்து முன்னேற, ஆஹா என்ன ஒரு ஆரோக்கியமான சூழல். அவன் மனம் மயங்க அப்படி என்ன காரணம். வானுயர்ந்த மரங்கள் அடர்ந்து காணப்பட்ட, பார்க்கும் இடமெல்லாம் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்க, காற்றில் மூலிகை வாசம் வீச, அங்கே ஒரு தடாகமும் இருக்க, அந்த தெளிந்த நீரில் இவன் முகம் இவன் காண , கேட்கவா வேண்டும், நிச்சயம் இவன் அங்கிருந்து கிளம்ப நிறைய நேரம் ஆகும். காய்ந்த இலை சருகுகளின் மேல் நடந்த அவனுக்கு அது புது அனுபவத்தை தந்தது. இதோ சூரியன் அந்த அடர்ந்த புதர்களில் இருந்து தன்னை விடுவித்து கொள்கிறான். அந்த காட்சி இவன் கண்களுக்கு மிக பெரிய விருந்து. ஒரு கல்லில் உட்கார்ந்து விட்டான். குயில் சகட்டு மேனிக்கு கூவுயது. தேவகானம் கூட தோற்றுவிடும் குயிலின் குரலிடம் என்பது இவன் அப்போதைய எண்ணமாக இருந்தது. இப்படி இவன் என்றுமே இருந்தது இல்லை. இயற்கை அந்த அளவுக்கு அவனை தன் வசபடுத்தியது. அந்த மகோன்னதனமான சூழல் அவன் மனதை ஏறகுறைய இலகுவாகிவிட்டது. இப்போது அவன் தன் தலைக்கு பின்னால் அவன் இரு கைகளை முட்டு கொடுத்து , கால்கள் இரண்டையும் நீட்டி அண்ணாந்து பார்த்துவாறு படுத்துவிட்டான். நல்ல காற்று வீசியது, அவன் தலை முடி கலைந்தது.
" காதலின் தீபம் ஒன்று" என்ற ரஜினியின்
" தம்பிக்கு எந்த ஊரு" படத்தின் பாடல் நினைவுக்கு வந்தது. அனால் இவன் இப்போதய வயது ஐம்பது. பறவைகள் நிறைய பறந்து வந்தது. பல இடங்களுக்கு பறந்து, பறந்து சென்றது. பறவைகள் ஆண்டவன் படைப்பில் அற்புத ரகம். இப்போது அவன் அந்த பறவைகள் நடத்தையை உற்று பார்க்க நேர்ந்தது. ஒரு பறவை ஒரு மரத்தின் கிளையுலும், இன்னொரு பறவை பக்கத்து மரக்கிளையிலிலும் அமர்ந்த வண்ணம் இருந்தது. இப்போது அவன் எழுந்து உட்கார்ந்து அந்த காட்சியை காண முற்பட்டான். கண்களை கூர்மையாக்கிகொண்டான். அந்த இரண்டு பறவைகள் நடந்து கொள்வது இவனுக்கு மிகவும் அதிசயமாகவுகும், வித்தியாசமாகவும், வியப்பாகவும், சுவையாகவும் விருவிருப்பாகவும் இருந்தது. இப்போது அவன் அந்த அற்புத காட்சியை பார்த்துக்கொண்டும், ரதித்து கொண்டும் இருந்தபோது அவன் எண்ணம் , அவன் கல்லூரி நாட்களை நினைவூட்டியது. மெரினா கடற்கரை எதிரே அமைந்த
" மாநில கல்லூரி ". என்ன ஒரு கம்பீரமான ஒரு கட்டிடம். பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த மிக பெரிய கல்லூரி. கட்டிடம் முழுக்க கலை நயம். மிக பெரிய வகுப்பறைகள். அண்ணாந்து, மிக உயரத்தில் இருக்கும் மேல் கூரைகள். மரபடிகட்டுகள். காற்று வகுப்பறைக்குள் நன்கு புகுந்து வர விசாலமான ஜன்னல்கள். கல்லூரியை சுற்றி மரங்கள். கல்லூரி நுழைவு வாயிலில் இருபுறமும் அசோக மரம் ஒரே உயரத்தில் வரவேற்க, இப்படி அந்த கல்லூரி ஒரு காலத்தில் நந்தவனம் போல் இருந்தது. தமிழ் ஐயா புலவர் ஆறுமுகம், பாடம் நடத்த, அந்த காட்சியை விளக்குகிறார். இரண்டு பறவைகள் எதிர் எதிரே வெவ்வேறு மரக்கிளைகளில் அமர்ந்து இருந்தது. ஒன்று ஆண் பறவை, இன்னொன்று பெண் பறவை. வெகு நேரம் இரண்டும் பார்த்துக்கொண்டது. ஏறகுறைய இரண்டும் காதல் கொண்டது. ஆண் பறவை தன் காதலை வெளிப்படுத்த, பெண் பறவை அருகே சென்றது. மிக அருகில் போய் உட்கார்ந்து. ஆண் பறவை , பெண் பறவையை பார்த்து ,
" நான் உன்னை காதலிக்கிறேன்" என்றது. பெண் பறவை நாணம் கொள்ள, தலை குனிந்த பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தது. ஆண் பறவை, பெண் பறவையின் பதிலுக்காக ஏங்கியது, தவித்தது. சில நிமிடம் கழித்து பெண் பறவை ஆண் பறவையை பார்த்தது. பெண் பறவை உடல் மொழியை நன்கு உணர்ந்து ஆண் பறவை ஆனந்தம் அடைந்தது. சந்தோஷம் வெள்ளத்தில் மிதந்த அந்த ஆண் பறவை , அங்கிருந்து ஒரு முறை மிக வேகமாக பறந்து மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்தது. பெண் பறவை " நான் உங்களை காதலிப்பது உண்மை ஆனால் ஒரு நிபந்தனை " என்றது.
" என்ன" என்றது ஆண் பறவை. " நமக்கு திருமணம் ஆண பிறகு , நாம் இருவரும் இனைய, ஒரு இடம் வேண்டாமா" கேள்வி எழுப்பியது பெண் பறவை. " ஆம், நிச்சயமாக " என்றது ஆண் பறவை. பெண் பறவை கட்டளையை தன் சிரம்மேல் ஏற்று அதை நிறைவேற்ற உடனே கிளம்பியது ஆண் பறவை. அங்கே, இங்கே திரிந்து பல குச்சிகளை சேகரித்து , ஒரு வழியாக, ஒரு அளவான , ஒரு அழகான கூட்டை கட்டியது ஆண் பறவை.
பெண் பறவை அந்த அழகான , அற்புதமான கூட்டை பார்த்து பரவசம் அடைந்தது. இப்போது ஆண் பறவவையும், பெண் பறவையும் சுதந்திரமாக, மிக சந்தோசமாக, தான் கட்டிய அந்த கூட்டில் தன் உறவை ஆரம்பித்தது, வாழ்கையை இன்ப களிப்புடன் வாழ்த்தது. சில காலங்களுக்கு பிறகு அந்த இனைக்கு ஒரு குஞ்சும் பிறந்தது. மூன்றும் ஒன்றோடு ஒன்று ஆணந்தமாக வாழ்கையை ரசித்தும், ருசித்தும் தொடர்ந்தது.

சிகரெட் நெருப்பு விரலை சுட , தன்னிலை மறந்து பின்னோக்கி சென்றவன் , நிகழ்காலத்துக்கு வந்தான். அதே பறவைகள். அதே கூடு. ஆஹா என்ன ஒரு அழகான, உண்மையான, சுதந்திரமான, ஆணந்தமான வாழ்க்கை பறவையுடையது. வெகு நேரம் யோசிக்காமல் அமைதியாக இருந்தான். மிக பெரிய தெளிவு அவனுள் வந்ததை உணர்ந்தான். மனம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று தன் காருக்குள் புகுந்து தன் வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்தினான். நூறு கோடிக்கு மேல் சொத்து, மிக பெரிய இன்டஸ்டிரியலிஸ்ட், ஆள் பலம், அரசியல் பலம் என்று இப்படி சகல வசதிகளை கொண்ட அவனுக்கு ஒரு மனைவி, ஒரே ஆண் வாரிசு. அந்த ஒரே வாரிசு மேல் படிப்பதற்காக அமெரிக்கா பயணப்பட்டு நான்கு வருடம் ஆகிறது. கார் அவன் மிக பெரிய பங்களாவை அடைந்தது. ஆடைகளை களைத்தான். நேரே குளியல் அறை சென்று ஷவரை திறந்தான். ஒரு அரைமணி நேரம் அப்படியே நின்றான். ஈர டவலுடன் வெளியே வந்தவன்
" கண்ணம்மா" என்றான். அவன் மனைவி ஓடி வந்தாள். " என்னங்க, எப்ப வந்தீங்க, என்ன கோலம் இது" பட பட என வெகுளித்தனமாக விசாரித்தாள்.
" கண்ணம்மா " என்றான். " என்னங்க " என்றாள் .
" கண்ணம்மா, என் கண்ணம்மா" என்று அவளை அனைத்து கொண்டான். சில நிமிடம் கழித்து,
" என்னாச்சு உங்களுக்கு " என்றாள்.
" இரண்டு பறவை கண்ணம்மா, இல்ல குஞ்சோட சேர்த்து மூனு பறவை தன் அளவான கூட்டுகுள்ள எவ்வளவு சந்தோசமாக வாழ்க்கை நடத்தியது தெரியுமா? இன்னிக்கு அந்த கண்கொள்ளா காட்சியை நான் நேரடியா ரசித்து பார்த்தேன், அது தான் வாழ்க்கை, அது தான் உண்மையான சந்தோஷம், அது தான் ஆனந்தமான வாழ்க்கை, அந்த பறவை வாழ்ந்த வாழ்க்கையை நாம ஒரு சதவிகிதம் கூட வாழல கண்ணம்மா. போதும் கண்ணம்மா இந்த போலியான வாழ்க்கை. போதும் கண்ணம்மா இந்த கார், பங்களா வாழ்க்கை. போதும் என் வியாபாரம். இந்த போலியான பெயர் , புகழ் எல்லாம் போதும். வாழனும், நாம இரண்டு பேரும் உண்மையான அன்பு வெளி படுத்தி வாழனும். அந்த பறவைகள் மாதிரி நாம இரண்டு பேரும் வாழனும். இந்த நிமிஷம் நான் முடிவு பண்ணிட்டேன், எல்லாமே உன் பையனுக்கு எழுதி வச்சிட போரேன். எனக்கு அதுல ஒரு நயாபைசா கூட வேனாம். நீ மட்டும் எனக்கு போதும். எங்க தாத்தாவோட இரண்டு காணி நிலம் எங்க கிரமத்துல இருக்கு , நம்ம நாளைக்கு அங்க போய் நம்ம மீதி உள்ள வாழ்க்கையை நம்ம இரண்டு பேரும் இயற்கையோட உண்மையா வாழலாம். "உனக்கு சம்மதம் தானே கண்ணம்மா" என்றான்.
" இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி " என்றாள்.
காலை விடியலுகாக, படுக்கையில் உறங்காமல் படுத்திருந்தான். காலை விடிந்தது. எழுந்து மணி பார்த்தான். மணி காலை சரியாக ஆறு. மிக உற்சாகமாக காணபட்டான். எத்தனை நாட்கள் கண்ணம்மா எனக்கு காலையில் எழுந்தவுடன் டீ போட்டு கொடுத்திருப்பாள். இன்னைக்கு நான் அவள் எழும் முன் அவளுக்கு டீ போட்டு தர போரேன். ஆஹா டீ ரேடி.... நல்லா தூங்கரா... எழுப்பலாமா.... ஆறு மணி மேல ஆயிடுச்சே, எழுப்பலாம்..... கண்ணம்மா.... கண்ணம்மா... எழுந்திரு... உனக்காக நானே என் கையால டீ போட்டு எடுத்து வந்திருக்கேன்... எழுந்திரு கண்ணம்மா.... கண்ணம்மா.... கண்ணம்மா.....

- பாலு.

எழுதியவர் : பாலு (18-Oct-19, 1:44 pm)
சேர்த்தது : balu
Tanglish : kannamma
பார்வை : 368

மேலே