கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 24

Toink Toink என்ற சத்தம் கேட்டு சிதறிய கவனத்தை மீண்டும் போனில் செலுத்தினாள் எமி. வட்ஸ் ஆப்பில் சுஜிதான் பேசி அனுப்பி இருந்தாள். அவள் பேசியதை காதில் வைத்து கேட்டுக் கொண்டே முன் வாசலுக்கு சென்று வாசற் கதவின் ஓரம் நின்று சுஜியின் வட்ஸ் ஆப்பிற்கு பதில் அனுப்பினாள் எமி.

ஹோட்டலின் பால்கனி கதவின் திரை சீலையை நகர்த்தி தேகத்தை சுடும் சூரிய வெளிச்சத்தில் தன் இரு கைகளையும் கட்டி கொண்டு தனக்குத் தானே தன் தோல் பட்டைகளை தேய்த்துக் கொண்டாள் சுஜி. அந்த கதகதப்பான சூடு ஐஸ்லாந்தின் குளிருக்கு சுகமாகவே இருந்தது.

குளிரில் அவளின் போனை பிடித்திருந்த சுஜியின் கரங்கள் கூட குளிரில் கிடுகிடுவென ஆடின.

பின்னாலிருந்து அவளை வந்து கட்டி கொண்டான் நிமலன்.

நிமலன்: பார்த்தீயா, உனக்கு பிடிச்ச மாறி ஒரு இடத்துக்கு கூட்டிகிட்டு வந்துருக்கேன்.

சுஜி: ஹ்ம்ம்...ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப நாளா ஆச்சிலே நீ நான் இந்த மாதிரி..

நிமலன் அவன் பிடியை தளர்த்தி சுஜியின் முன்னே நின்றவாறு கொஞ்சம் பின்னோக்கி சென்றான்.

நிமலன்: என் அழகு தேவதைக்கு, இந்த நிமலன் குடுக்கற ஒரு சின்ன காதல் பரிசு. Amor De La Vida. Love of the life.

சுஜி திக்கெற்று நின்றாள். ஆம், அவள் காதுகள் கேட்டது உண்மைதான். நிமலன் அவளுக்காக பரிசாக அளித்திருப்பது மாளிகை போன்ற இந்த பிரமாண்ட ஹோட்டலைத்தான். ஐஸ்லாந்தில் ஒரு ஹோட்டலின் சொந்தக்காரி என இனி சுஜியும் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.

சுஜி: நிமல், ஏன் இந்த ஹோட்டல்...

நிமல் சுஜியின் உதட்டில் கைவைத்து சொன்னான்,

நிமல்:shuuuuuu.... எல்லாமே உனக்குத்தான் உனக்கு மட்டும் தான். நீ கேட்கறது கேட்காதது எல்லாமே உன் காலடில கிடைக்கும் சுஜி.

சுஜி அவனுக்கு புன்னகை ஒன்றை பதிலாய் அளித்து அவ்விடத்திலிருந்து மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். போக விட்டு அவளையே பார்த்தான் நிமலன். நிமலன் சர்வேஷ் குமார்.

முன்பு பார்த்த சுஜிக்கும் இப்போது பார்க்கும் சுஜிக்கும் நிறைய மாற்றங்கள். அது இவன் அறிந்ததே. காதலுக்கு முன் திருமணத்திற்கு பின், அது சாதாரணமான விசியம். ஆனால், சுஜியின் தற்போதைய மாற்றம் மிகவும் புதுமையாக இருப்பதை நிமலன் உணராமல் இல்லை என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் அவன் அதை உணரவே இல்லை.

நிமலன் அவன் பார்வையை எதிரே தெரிந்த குன்றுகளின் மேல் படர விட்டான். சுஜியை அவனுக்கு எப்படி தெரியும் என்பதை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவளை அடைய அவன் எவ்வளவு போராட வேண்டி இருந்தது.

ஏறக்குறைய ஆறாண்டு ஏழாண்டு அவளுடன் மல்லுக்கட்டி அவளின் கரம் பற்றியது மற்றவர்களின் பார்வையில் சாதாரணமான விசயமாக இருக்கலாம். ஆனால், அவனுக்கு அப்படி இல்லை. பல யுகங்கள் தாண்டிய சோதனை, வேதனை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

நிமலனின் எண்ண அலைகள் ஹவாயன் தீவை நோக்கி பயணித்தது.

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (18-Oct-19, 12:06 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 236

மேலே