புத்தனை தேடாதீர்கள்

புத்தனை தேடாதீர்கள் பொறுப்பற்று
தவிக்கவிட்டு

போய்விடுவான் மனநிலை பிழன்றவன்

ஒரு ஆறுதல் யசோதரைக்கு

சித்தால் வேலை தேடவில்லை

புத்தனை தேடாதீர்கள் ஆசையே

அழிவுக்கு காரணம் என்பான் கற்பனாவாதி

பசித்த வயிறு உணவு கேட்குமே

ராகுலனை யசோதரை கைவிடவில்லை

புத்தனை தேடாதீர்கள் பெண்களே

ராஜபரம்பரை இல்லை நீங்கள்

சரிசரியை தேடுங்கள் சண்டையும்
சச்சரவும்

உங்களை நகர்த்திச் செல்லும்

புத்தனை தேடாதீர்கள் பெண்களே

அவன் மடியில் நீங்கள் இருக்க

கண்மூடிக்கிடந்திடுவான்

எழுதியவர் : நா.சேகர் (24-Oct-19, 1:17 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 170

மேலே