நீங்களும் வாழ்க

உலை கொதிக்க
உள்ளூர ஆவி பறக்க
விதை சிதைக்க
வெந்து வெண்சோறு பெருக
பசி ஆற
பட்டினி குறைய
பெருந்தீ மூட்டிய
வள்ளலாரே நீங்கள் வாழ்க...!

மதம் பித்துப்பிடித்து அலய
சாதி வெறிபிடித்து மடிய
மக்கள் மனத்திசையை மாற்றி
நித்தம் இரத்தம் குடித்த
பெருந்தலைவர்களே நீங்களும் வாழ்க...!

வயிறு பெருக்க
வாரிக் குவிக்க
வாரிசுக்குச் சேர்க்க
தலை குனிந்து வாக்கு கேட்டு
வாக்குறுதி அளித்த
வேட்பாளர்களே நீங்களும் வாழ்க...!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (24-Oct-19, 4:24 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : neengalum vazhga
பார்வை : 275

மேலே