மருத்துவ வெண்பா - வெள்ளாட்டு மோர் - பாடல் 18

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக் களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர் களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

வெண்பா:

பாரோர்க்(கு) இதமூட்டும் பாவைநல்லாய்! வெள்ளாட்டின்
மோரோநீர்க் கட்டை முறித்துவிடும் – பேரோங்கும்
மேகத்தை யோட்டிவிடும் மேனி யழகாக்கும்
பாகத்தை யுண்டறிந்து பார்.

பொருள்:

பெண்ணின் நல்லவளே! வெள்ளாட்டின் மோர் அருந்துவோர்க்கு இதமும் சுகமும் தரும். நீர்க்கட்டை சரிப்படுத்தும். தொல்லை தரும் மேகநோயை நீக்கி உடல் அழகைப் பெருக்கும். வெள்ளாட்டின் மோரை உண்டு அதன் குணமறிந்து சொல் என்கிறார் இவ்வாசிரியர்.

நீர்க்கட்டு – urinary infection

மேகநோய்: an excessive discharge of watery mucus, esp from the urethra or the vagina due to sexually transmitted disease.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Oct-19, 8:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே