இயக்குனரின் இயக்குனர் யார்
உபா,குண்டர் சட்டம் என பல பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து "Look Up Notice" ஒட்டி சிறைபடுத்தப்பட்டவர் திருமுருகன் காந்தி.
எந்தவொரு இழி பேச்சுக்களும் பேசியவர் அல்லர்.மேடைதோறும் பிராமனியத்தின் சூழ்ச்சி அதனால் ஏற்பட்ட இழிவின் துயரை துடைப்பதைப் பற்றி பேசிவருகிறவர்.
சீமானோ வெறுப்பு அரசியலை வீதிதோறும் விதைத்துவருகிறார்.சீமான் பிராமணியத்தை பகைத்துக் கொள்வதில்லை.'தமிழ் பிராமணர்கள்' என்று மண்டய வச்சும் அண்ட குடுக்கிறார்.சீமானின் அரசியல் திராவிட எதிர்ப்பு இன்னும் நெருங்கி பார்த்தால் அதில் திமுக எதிர்ப்பே பிரதானம்.
திருமுருகனும் திமுகவை ஏற்பவரில்லை ஆனால் திராவிட உணர்வுடைய தமிழ் தேசியர்.திருமுருகன் தமிழகத்திற்கான பெரியாரின் சமூகநீதி அரசியலை முன்னெடுக்கிறார்.உணர்வு எழுச்சியால் கேட்போரை தூண்டிவிட்டு அரசியல் மைலேஜ் தேடாமல் பிறர் சிந்தனையை தூண்டிவிட்டு பேசக்கூடிய பெரியாரியர்.
எச்.ராஜா,எஸ்.வி.சேகர்
போன்றோரின் வன்முறைப் பேச்சை எப்படி சட்டமும் அரசும் கண்டுகொள்வதில்லையோ அப்படியே சீமானும் அவரது விசமப்பேச்சுகளும் கண்டுகொள்ளாமல் கடந்து போகப்படுகிறது.
காரணம்,பிராமணியத்தின் சிம்மசொப்பனமாய் இருக்கிற பெரியார்,அண்ணா,கலைஞரை (திராவிடத்தை) இவர் இழிவு செய்வது பிராமணர்களால் ரசிக்கப்பட்டிருக்கலாம்.
பெரியார் சிலைக்கு மாலை போட்டதற்காக திருமுருகன் காந்தியை 'தேசத்துரோக வழக்கில்' கைது செய்த அரசுகள் தேசத்திற்கே பாதகமான கருத்தை சீமான் பல முறை சொல்லியும் கூட அவர்மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது வலுவான சந்தேகத்தை கிளப்புகிறது.
ராஜீவ் பற்றிய சீமான் பேச்சின் விளைவால் எழுவர் விடுதலையில் ஏற்பட்ட பின்னடைவை தமிழ்ச்சமூகம் வரலாற்றில் வரவு வைக்கும்.
இப்போது கூட,ராஜீவ்காந்தியின் மரணம் பற்றிய சர்ச்சையில் இன்னமும் மாவட்ட ஆட்சியரால் அறிக்கை அளிக்கப்படவில்லை.
இவையெல்லாம் சீமான் 'யாருடைய ஊதுகுழல்' என்கிற கேள்வியை நம்முள் இயல்பாக எழுப்பச் செய்கிறது.
சீமானே சொன்னதுபோல அவரது பீலாக்கல் உயர்தரம்தான் ஆனால் அந்த பீலாக்கள் தமழ்நிலத்தின் இளம் விதைநெல்களை மலடாக்கிவிடக்கூடாது என்பதுதான் ஒரே கவலை !