பாரதிநேசன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பாரதிநேசன்
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  10-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Sep-2011
பார்த்தவர்கள்:  186
புள்ளி:  31

என்னைப் பற்றி...

என் எழுத்துகள் சொல்லும்....

என் படைப்புகள்
பாரதிநேசன் செய்திகள்
பாரதிநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2019 4:09 pm

ஏன் இப்படி?

என்னுள் எழுகிற
இக்கேள்வி
திருவிழாக் கூட்டமொன்றில்
தெருவோரம் வீசப்பட்ட
காதறுந்த
ஓற்றைச் செருப்பாய்
கிடக்கிறது

ஏன் இப்படி?

அவள்
என்னுடன் தான்
இருக்கிறாள்
பேசுகிறாள்
சாப்பிட்டாயா
என கேட்கிறாள்
சிரிக்கிறாள்
என்னைச் சபிக்கிறாள்
கோபப்படுகிறாள்
கொதித்தெழுகிறாள்
முறைக்கிறாள்
பேசாதே என்கிறாள்
சிலசமயம்
பேசவேசெய்யாதே
எனச் சொல்லிவிடுகிறாள்

ஏன் இப்படி?

அவளோடு பேச
நானும் என்மனமும்
தினந்தினம் எத்தனை
முன்தயாரிப்புகளோடு
காத்திருப்போம் தெரியுமா

அவளின் "ஹலோ"
என் இரத்த அணுக்களை
துள்ளிக்குதிக்க
தூண்டிவிடும்

காற்றோடு கலந்து பேசும்
அவள் கா

மேலும்

பாரதிநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2019 4:07 pm

உபா,குண்டர் சட்டம் என பல பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து "Look Up Notice" ஒட்டி சிறைபடுத்தப்பட்டவர் திருமுருகன் காந்தி.

எந்தவொரு இழி பேச்சுக்களும் பேசியவர் அல்லர்.மேடைதோறும் பிராமனியத்தின் சூழ்ச்சி அதனால் ஏற்பட்ட இழிவின் துயரை துடைப்பதைப் பற்றி பேசிவருகிறவர்.

சீமானோ வெறுப்பு அரசியலை வீதிதோறும் விதைத்துவருகிறார்.சீமான் பிராமணியத்தை பகைத்துக் கொள்வதில்லை.'தமிழ் பிராமணர்கள்' என்று மண்டய வச்சும் அண்ட குடுக்கிறார்.சீமானின் அரசியல் திராவிட எதிர்ப்பு இன்னும் நெருங்கி பார்த்தால் அதில் திமுக எதிர்ப்பே பிரதானம்.

திருமுருகனும் திமுகவை ஏற்பவரில்லை ஆனால் திராவிட உணர்வுடைய தமிழ் தேசியர்.திரும

மேலும்

பாரதிநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2019 4:04 pm

அது ஒரு
பொன்மாலைப்
பொழுது கொட்டகை

தினமும் மாலை
மட்டும் இயங்கும்
மந்திர சன்னதி

யார்
வேண்டுமானாலும்
வரலாம்
எல்லா சாதியும்
எல்லா மதமும்
எல்லா இதயங்களும்
அனுமதிக்கப்படும்

அந்த கொட்டகை
பக்கத்தில்
வசிப்பவர்கள்
பேரதிர்ஷ்டசாலிகள்

அவர்களுக்கு
மட்டும்
விலைச்சலுகை உண்டு

மாலை வந்ததும்
மனிதத் தலைகள்
படர்ந்துவிடும்

அந்த
கொட்டகையில்
நுழைவதற்கு
"முன் பதிவு"
அவசியம்

இப்போது
"ஆன்லைன் முன்பதிவும்"
நடைமுறையில் உள்ளது
ஆனால்
விலைகளைப் பற்றி
யாரும் பெரிதாய்
அலட்டிக் கொள்வதில்லை

அந்த கொட்டகை
செல்லும் யாவரும்
குழம்பிய முகத்தோடு
செல்வர்
தெளிந்த முகத்தோடு

மேலும்

பாரதிநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2019 4:02 pm

என்னோடு
இருந்துவிடு
எனக்காக
இருந்துவிடு

உன்னோடு
இருந்துவிடுகிறேன்
உயிரோடு
கிடந்துவிடுகிறேன் !

மேலும்

பாரதிநேசன் - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2015 5:52 pm

இணையா இருப்புப்பாதை..
உங்கள் காதலைமட்டும்..
இனைக்கவா போகின்றது
போராடும் துணிவின்றி..
தண்டவாளத் தஞ்சமேன்
காதலரே..

மேலும்

நன்றி நட்பே.. 04-Jun-2015 6:58 pm
பிரமாதம் அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை 04-Jun-2015 3:47 pm
mm நன்றி நட்பே...தொடர்பார்வை தந்த ஊக்கத்திற்கு நன்றி நட்பே 30-May-2015 6:03 pm
அழகிய வருடல்கள் நண்பரே!! நல்லாயிருக்கு உங்கள் கவிகள் சுவை நாளுக்கு நாள் எனக்கு அதிகிரிக்கிறது போல் தான் உணர்கிறேன் 30-May-2015 5:54 pm
பாரதிநேசன் - மணி அமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2015 3:25 pm

சட்டைக் கிழித்து வீதியில் அலையவில்லை

தன்னை மறந்து மொழிகள் உளறவில்லை

காரணம் ஏதுமின்றி கண்டபடி சிரிக்கவில்லை

ஆனாலும்
நான் பைத்தியம்தான்

ஆமாம்
நான் பைத்தியம்தான்

என்
இதயம் கிழித்து
உன் நினைவு வீதிகளில் சுற்றித்திரியும்
"காதல் பைத்தியம்"

மேலும்

வலிகளை பதிவு செய்த விதம் அருமை 04-Jun-2015 2:50 pm
நன்றி நண்பரே இன்னும் எழுத தூண்டுகிறது வலிகளும் தங்களின் வாழ்த்துகளும்... 03-Jun-2015 7:38 pm
என் இதயம் கிழித்து உன் நினைவு வீதிகளில் சுற்றித்திரியும் "காதல் பைத்தியம்" அழகான வரிகள் நிதர்சனமான சிந்தை 03-Jun-2015 7:26 pm
பாரதிநேசன் - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2015 6:37 pm

உடலில் ஒன்று(ம்) இல்லை யென்றாலும்..
காற்றை வைத்தே கவிதை பாடும்..
புல்லாங்குழல் மனிதர்கள் மாற்றுத் திறனாளிகள்
-மூர்த்தி

மேலும்

பாராட்டி கருத்திட்டுத் தந்த ஊக்கத்திற்கு நன்றி தோழமையே . 04-Jun-2015 7:02 pm
அருமை 04-Jun-2015 2:44 pm
மனமாற பாராட்டி கருத்திட்டுத் தந்த ஊக்கத்திற்கு நன்றி தோழமையே . 30-May-2015 2:36 pm
உண்மை சீரிய சிந்தனை 29-May-2015 3:20 pm
பாரதிநேசன் - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 3:23 pm

     தொலைந்து போன தருணங்களில்


மரப் பெட்டிக்குள்  இருக்கும்

சுருக்குப் பையின் சில்லரைகள்

அழுதது எனைப் பார்த்து


தாத்தா வாங்கிய கண்டாங்கிச்சேலை

ஆத்தா படுத்திருந்த கட்டிலுக்குள்

 போர் ர்த்திக் கொள்ள யாரும் இல்லா

அனாதையாகிப் போனது பெட்டியோடு


குலுங்கிக் குலுங்கி அழுகை யில்

ஆத்தா படுத்துறங்கிய முற்றம்

தொட்டி மீன்கள் சுற்றும் பூமியாக

கண்ணாடி பெட்டகத்தில்


ஆத்தா சுவற்றில் தட்டிய சாண

.வறட் டிகளும் உடன்கட்டை ஏறின

தாத்தாவோடு....

மேலும்

தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி 04-Jun-2015 10:11 pm
அருமை நண்பரே ! கிராமத்து நினைவலைகள் இழுத்து செல்கிறது என்னை ! 04-Jun-2015 2:43 pm
எமக்கும் அந்த பாக்கியமே.அந்த நினைவுகள் என்னை ஈர்த்தது எழுந்தது கவி வரிகளால் .... கவிக்கோ வின் வாழ்த்திலும் வருகையிலும் அகம் மகிழ்ந்தேன் நன்றி நண்பரே! 03-Jun-2015 10:38 am
உண்மையில் என்னைப்போன்றவர்கள் , பெரியோர்களை பார்த்து , அன்புடன் பழகிய அந்த மாபெரும் உள்ளங்களை , நெஞ்சில் வைத்து என்றும் வணங்கிடும் எனக்கு இந்த வரிகள் மேலும் புத்துணர்ச்சியையும் , விழிகளில் வழிந்தோடும் நினைவலைகளை .......மிக அழகாக உங்கள் வரிகள் மூலம் கொணர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஜெயா . 03-Jun-2015 7:01 am
பாரதிநேசன் - பாரதிநேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2015 11:14 am

இன்னும் சில காலங்களே உள்ளன..
*என்னை சுற்றி மக்கள் கூட்டம் அலைமோத,கட்டுபடுத்த முடியாத ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் நடுவே என் கையொப்பத்தை "ஆட்டோகிராப்" என அவர்கள் தாளில் இட இன்னும் சில காலங்களே உள்ளன..
*மேடைகளில் என் குரல் ஒலிப்பதை நீங்கள் கேட்க இன்னும் சில காலங்களே உள்ளன,
*தொலைகாட்சிகளும்,பத்திரிகைகளும் என் தினசரி நடப்புகளை "முக்கிய செய்தியாக" அறிவிக்க இன்னும் சில காலங்களே உள்ளன,
*என் பெயர் வரலாறாக மாற இன்னும் சில காலங்களே உள்ளன,
*எப்படி என்றால் பதிலில்லை ,எப்போது என்றால் இன்னும் சில காலங்களே!..
*அற்ப கனவு என்று ஏளனம் செய்துவிடாதீர்கள்,கனவுகளே கலாம்களை உருவாக்கின,கனவுகளே சாக்ரடீச்களை உருவாக

மேலும்

பாரதிநேசன் - பாரதிநேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2015 11:17 am

என் வாழ்வின் முதல் பக்கம் என்

தாயின் முத்தங்களால் நிரப்பப்பட்டன

பிற பக்கங்கள் ஆரவாரத்தோடு காத்திருகிறது

என்னவளின் வருகைக்காக !

-‪#ஆரூர்_ராஜன்‬

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே