இன்னும் சில காலங்களே உள்ளன

இன்னும் சில காலங்களே உள்ளன..
*என்னை சுற்றி மக்கள் கூட்டம் அலைமோத,கட்டுபடுத்த முடியாத ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் நடுவே என் கையொப்பத்தை "ஆட்டோகிராப்" என அவர்கள் தாளில் இட இன்னும் சில காலங்களே உள்ளன..
*மேடைகளில் என் குரல் ஒலிப்பதை நீங்கள் கேட்க இன்னும் சில காலங்களே உள்ளன,
*தொலைகாட்சிகளும்,பத்திரிகைகளும் என் தினசரி நடப்புகளை "முக்கிய செய்தியாக" அறிவிக்க இன்னும் சில காலங்களே உள்ளன,
*என் பெயர் வரலாறாக மாற இன்னும் சில காலங்களே உள்ளன,
*எப்படி என்றால் பதிலில்லை ,எப்போது என்றால் இன்னும் சில காலங்களே!..
*அற்ப கனவு என்று ஏளனம் செய்துவிடாதீர்கள்,கனவுகளே கலாம்களை உருவாக்கின,கனவுகளே சாக்ரடீச்களை உருவாக்கின,கனவுகளே வரலாற்று நாயகர்களை உருவாக்கின.எனக்கு அங்கே ஏற்பாடுகள் நடந்துகொண்டுதான் உள்ளன நாற்காலிகளை சற்று அழுத்தமாக போட சொல்லியுள்ளேன்,
*என் கனவின் கற்பகாலம் முடியபோகிறது,என் வாழ்வு இனிதே மெல்ல ஆரம்பம்.,
இப்போது நான் எழுதியது வருங்காலத்தின் சிறந்த தன்னம்பிக்கை சான்றாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை,
*ஏனெனில் என்னை பற்றிய பிறரது அபிப்ராயங்கள் வெறும் "காலி அபிப்ராயங்கள் "என்னை பற்றிய எனது அபிப்ராயங்கள் அது "எனது அஸ்திவாரங்கள் ".
*என் பெயரை தட்டியது வந்தும் கொட்டும் கூகுல் செய்திகள்,எனகென 30000000000 பக்க விக்கிபீடியா அனைத்தும் விரைவில்.,.,.,.,.,,,,,,,
--‪#‎ஆரூர்_ராஜன்‬ (க.பி)

எழுதியவர் : ஆரூர் ராஜன் (3-Jun-15, 11:14 am)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 111

மேலே