தொலைந்து போன தருணங்களில்

     தொலைந்து போன தருணங்களில்


மரப் பெட்டிக்குள்  இருக்கும்

சுருக்குப் பையின் சில்லரைகள்

அழுதது எனைப் பார்த்து


தாத்தா வாங்கிய கண்டாங்கிச்சேலை

ஆத்தா படுத்திருந்த கட்டிலுக்குள்

 போர் ர்த்திக் கொள்ள யாரும் இல்லா

அனாதையாகிப் போனது பெட்டியோடு


குலுங்கிக் குலுங்கி அழுகை யில்

ஆத்தா படுத்துறங்கிய முற்றம்

தொட்டி மீன்கள் சுற்றும் பூமியாக

கண்ணாடி பெட்டகத்தில்


ஆத்தா சுவற்றில் தட்டிய சாண

.வறட் டிகளும் உடன்கட்டை ஏறின

தாத்தாவோடு....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (2-Jun-15, 3:23 pm)
பார்வை : 177

மேலே