வல்லவனுக்கு

வல்லவனுக்குப் புல்லும்
வலுவான ஆயுதமே!
வீசிய வலையில்
விழுந்த மீனைக் கைப்பற்றிட
புல்லையே தூணாக்கி
பற்றிக்கொண்டு கால்களில்
அலகாலே அம்மீனை
அசைப்போட
அங்கலாய்த்திடும் பறவையும்
இப்பழமொழி அறிந்தே
வினையாற்றியதோ...?
பறவைக்குப் புரிந்தது
மனிதர்க்கு புரிவதில்லை!
மனத்தால் ஆகாததும்
முயன்றால் ஆகாததும்
புத்தியால் ஆகிடும்!

எழுதியவர் : சுமித்ரா (2-Jun-15, 9:00 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 89

மேலே