உலகம் கொண்டாடும் தீபாவளி

தீபாவளி தமிழ்மயமானது... 
எங்கள் வீட்டு முறுக்கு சீடை 
அதிரசம் வடை இதை 
அழகாய்ச் சொல்கிறது... 
அது இந்தியமயமானது..
மைசூர்பாகு அது
மகிழ்வாய்ச் சொல்கிறது... 
உலகமயமானதும் கூட 
குலோப்ஜாமுன் அதை
குதூகலமாய்ச் சொல்கிறது... 

தீபாவளி... 
அதே ஊர்... தெரு.. வீடு.. 
இருந்தும் இன்று எல்லாம் 
புதிதாய்த் தோன்றும்..
அங்கிங்கு என்றில்லாமல் 
எங்கெங்கிலும் உற்சாகம்..
சந்தோசம் கரை புரண்டோடும்..

புத்தாடைகள் பளபளப்பு...
காண்போரெல்லாம் கண்ணுக்கழகு..
மனித முகங்களின் 
பிரகாசத்தில் இன்று 
திசைகள் எல்லாம் கிழக்கு... 

தீபாவளியின் தீப ஒளியில் 
எல்லாம் ஒளிமயம்... 
தீபாவளி நாளிதில் 
விடுமுறை உற்சாகத்தில் 
வருஷம் ஒன்று தனக்குத் 
தேவையான சக்தியை 
எடுத்துக் கொள்ளும்... 

நம்மில் தோன்றும் 
அறியாமை.. தீமைகள் 
பேதைமை குணங்கள் 
நம்மாலேயே அழியட்டும்... 
பூமாதேவியால் நரகாசுரன் 
அழிந்தது போல்... 
பட்டாசுகள் இதை 
பறைசாற்றட்டும்... 

ராக்கட் வெடியில்
விண்ணதிரும்...
அணுகுண்டு பட்டாசில்
மண்ணதிரும்...
வெடிகளின் சத்தங்களில்
மனம் அதிரும்...
ஆனந்தம் கொள்ளும்...
இன்னொருவர் வெடிக்கும்
பட்டாசும் இன்பம் தரும்...

தீபாவளி என்றாலே 
தெருவெல்லாம் பட்டாசு 
மனசுக்குள்ளும் மத்தாப்பு... 
அனைவருக்கும் இனிய 
தீபாவளி வாழ்த்து...

அன்புடன்.. 
ஆர்.சுந்தரராஜன்...
🎂🧁🌹💐🌺👍👏🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (27-Oct-19, 7:50 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 103

மேலே