ஏன்டா இந்த நடிப்பு

என் வீட்டே பற்றி எரிய ஊரெல்லாம் வேட்டுச்சத்தம் கேட்குதா? கேட்குதா?
குழந்தையவன் பறிதவிக்க பிரார்த்திக்கிறேன், இறைவன் தான் காப்பாற்ற வேண்டுமென சமூக வலைதளங்களில் எழுதிவிட்டு உண்ணாமல் இருந்தோமா?
உறங்காமல் இருந்தோமா?
வேளை தவறாமல் எல்லாமே நடக்கிறது,
அப்புறமென்ன இரக்கம் கொண்டவனைப் போல அன்பானவனைப் போலொரு வேஷம்?

அந்த படம் சரியாக ஓடி வெற்றியடையனுமாம்,
மண்சோறு தின்று பக்தர்களாக மாறிய அந்த பட இரசிகர்கள்!
வெக்கமா இல்ல!
கொஞ்சங்கூட கூச்சமே இல்லாமல் இப்படி திரியுறதுக்கு?!

டிக்கெட் கிடைக்கலனா திரையரங்கத்தை உடைச்சு திரையை கிழிப்ப!
அப்பன் காசு கொடுக்கலனா அவன் தலையை வெட்டிடுவா?
கொஞ்ச கூட வெட்கமில்லாமல் இரசிகன் என்று சொல்லிட்டு திரியுற?!
உன்னுடைய முட்டாள் தனம் தான்டா அவனுடைய முதலீடு.

அவன் என்ன செய்தாலும் கை தட்டக் கூடிய பைத்தியங்களாய் மாறிய உங்களுக்கு என் வார்த்தைகள் புரியாது!
குழந்தையின் உயிர் போராட்டத்தைக் கூட வியாபாரமாக்கும் ஊடகங்களின் உணர்ச்சியைத் தூண்டும் எமோஷனல் பிசினஸ் நல்லாவே நடக்கிறது உங்க புண்ணியத்தில்.
செவிடான கடவுளின் காதுகளுக்கு பிராத்தனை சத்தங்களை கேட்கவிடாமல் இந்த வெடிசத்தங்கள் தடுக்கின்றன.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Oct-19, 9:46 am)
Tanglish : enda intha nadippu
பார்வை : 3477

மேலே