இல்லாமல் போனது
ஆடு நின்றிருக்க
ஆட்டுக்குட்டி பால் குடிக்க
தவழும் குழந்தை பார்க்க
தரையில் படுத்து இரசிக்க
புரியாம சிரிக்குதா ?—இல்லை
பாலுக்கு ஏங்குதா?
இறைவன் வந்து நிற்க
இந்த நிலை கண்டிருக்க
ஆச்சரியப்பட்டாலும்—அவனும்
உதவாமல் போனதற்கு
வெட்கப்பட்டான்
வருந்தி மறைந்து போனான்
சாதிக்க வந்ததுபோல்
சாதனை புரியும் சூரியன்,
சாலையோர நிழலில்
சாகக்கிடப்பதுபோல் ஒரு பாட்டி
காசுக்குக் கையேந்தி
கவணிக்க ஆளின்றி கிடக்குதே
பிள்ளைகளின் செயல்களால்
புலம்பி அழும் பாட்டி,
நீங்கள் இருக்கக் கருவறை ஒன்று
இருந்தது என் வயிற்றில்—நானிருக்க
ஒரு இருட்டறை கூடவா
உங்களிடம் இல்லாமல் போனது?