கண்ணீர் பூக்கள் 🙏

கண்ணீர் பூக்கள் 🙏

அந்த அற்புத நினைவுகள்
என்னை விட்டு நீங்கவில்லை.
அந்த ஆனந்த நாட்களை என்னால் மறக்க இயலவில்லை.
அந்த பிஞ்சு விரல்கள் என் மனம் விட்டு நீங்கவில்லை .

எப்படி என்னை மறந்தாய்.
உன்னை தோள் மீதும் என் மார்பு மீதும் போட்டு ஆசையை வளர்த்ததை
எப்படி மறந்தாய்.
நீ சாப்பிடாமல் நான் சாப்பிட்டதில்லை.
நீ உறங்காமல் நான் உறங்கியது இல்லை.
நீ பிறந்த போது நான் பெற்ற இன்பம்
என்னால் வார்த்தைகளால் சொல்ல இயலாது.
உலகமே நீ தான் என்று நான் என்னியதை நீ எப்படி மறந்தாய்.
ஒவ்வொரு நொடியும் உன் சிந்தனையே
உன் ஒவ்வொரு அசைவும் எனக்க ஆனந்தம்.
உன் ஒவ்வொரு வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சி.
நீ பக்கத்தில் இருந்தாலே போதும் எனக்கு அதுவே மிக பெரிய பலம்.
என்னை மறக்கும் அளவுக்கு,
என்னை உதாசின படுத்தும் அளவுக்கு,
உன் மனதை யார் கெடுத்தது.
அப்படி யாரேனும் உன் மனதை கெடுத்தாலும்
நீ ஏன் மாறினாய்.
நீ ஏன் முற்றிலும் மாறிவிட்டாய்.
வாழ்க்கை ஒரு சுழற்சி தான்,
அதில் உனக்கும் வாழ்க்கை உள்ளது.
உன் வாழ்க்கையை நீ வாழ வேண்டும்.
நன்றாக புரிகிறது.
என்றாலும் கொஞ்சம் பொதுவான யோசனை செய்யாமல்
ஒட்டு மொத்தமாக என்னை ஓரங்கட்டியது
எந்த விதத்தில் நியாயம்.
சொல் மகனே சொல்.
எந்த விதத்தில் நியாயம்.
என் புலம்பல்கள் உனக்கு நிச்சயம் கேட்க போவதில்லை.
நான் உன் குறித்து புலம்பியது நிச்சயம் எந்த பிரயோஜனம் இல்லை.
என்றாலும் மனம் பாசம் என்னும் பிடியில் இருந்து விடு பட தயங்குகிறது.
எல்லாம் மாயை தான் என்று யாரோ ஒரு மகான் கூறுவது காதில் விழுகிறது.
ஆனால் நான் சராசரி மானுட பைத்தியம் தானே.
என்னால் எப்படி மாற முடியும்.
என்னால் எப்படி என் மகனை மறக்க முடியும்.
பத்து மாதம் சுமந்த அந்த தங்கத்தை எப்படி மறக்க முடியும்
சீராட்டி, பாராட்டி வளர்த்த என் அன்பு மகனை எப்படி மறக்க முடியும்.
நீ ஊருக்கே ராஜாவாக இருக்கலாம்.
ஆனால் உன்னை ஈற்றெடுத்த தாய் நான் தான்.
நீ என்னை வெறுத்து வேண்டாத குப்பையாக எங்கும் வீசலாம்.
ஆனால் உன் வீட்டில் நீ வைக்கும் செடிக்கு உரமாக மாறி நல்ல கனி கொடுப்பேன்.
வாழ்க்கையின் விளிம்பில் நான்.
முதுமையின் பிடியில் நான்.
இறுதி நாட்களை விரல் விட்டு எண்ணி கொண்டிருப்பள் நான்.
மகனே நன்றாக இரு.
வாழ்க்கையின் எல்லாம் வளமும் பெறு.
ஒரே ஒரு ஆசை
நிறைவேற்றுவாயா
இந்த மண்ணை விட்டு நான் போவதற்கு முன்,
உன்னை ஒரே ஒரு முறை ஆசையாய் ஆர தழுவி
உன் உச்சி முகர்ந்து
என் ஆசை முத்தம் தர வேண்டும்.
வருவாயா.... என் மகனே... என் ஆசையை... நிறைவேற்றுவாயா...

- பாலு.

எழுதியவர் : பாலு (28-Oct-19, 3:28 pm)
சேர்த்தது : balu
பார்வை : 1394

மேலே