வாலி நீ பாட்டில் பலசாலி

வாளி வாளியாய் இறைத்தாய் வார்த்தைகளை
வனப்பாய் வாலிபமாய் வந்தன பாட்டுக்கள்
வழக்கமான வார்த்தைகளால் வனைந்தாய் கவிதையை
வழக்கத்திற்கு முரணாக வந்தன பாடல்களாய்

எப்படி எப்படி என்று வினவினாய் கேள்விகளால்
படைத்தவன் மேலும் பசித்தவன் மேலும் பரிவானாய்
உயிர்கள் அழைக்கும் வார்த்தைக்கு பா அமைத்தாய்
காதல் இன்றி வாழ்வது லேசா லேசா என்றாய்

கண் போன போக்கிலே கால் போகக் கூடாதென்றாய்
மன்னவனே நீ அழலாமா என்றும் தேற்றினாய்
நீலவானத்தை ஓடையாய் கண்டு குதுகலித்தாய்
வடக்கே கேட்டுப் பாரு என்னைப் பற்றி என்றாய்

எங்கள் உணர்வாய் எழுச்சியில் திளைத்தவனே
எட்டுத்திக்கும் உன்புகழ் பட்டொளியாய் மின்ன
எல்லா ஆண்டிலும் அக்டோபர் 29 தை போற்றுகிறோம்
ஏகாந்தத்தை கொடுத்த உன்னை தொழுகிறோம்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (29-Oct-19, 10:41 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 144

மேலே