தமிழகம்
தமிழகமே என் தமிழகமே!!
வந்தாரை வாழ வைத்த தமிழகமே!!
எப்போது உன் மக்களை வாழ வைப்பாய்... தமிழகமே!!
கீழடி பெருமை தந்த தமிழகமே!!
தமிழர்களை கீழ் தள்ளுகின்றனர்... தமிழகமே!!
உன்னை காக்க தமிழ் சங்கம் வளர்த்தோம்... தமிழகமே!!
எங்களை காக்க எந்த சங்கமும் வரவில்லை... தமிழகமே!!
பிற மாநிலத்தவருக்கும் வழி வகுத்த... தமிழகமே!!
இன்று உன் மக்களுக்கு வழி மறுக்கப் படுகிறது... தமிழகமே!!
மக்களை மதிக்க மறந்து விட்டனர்.. தமிழகமே!!
நல்வழி காட்ட உறவற்று நிற்கிறோம்... தமிழகமே!!
உன் மக்களுக்கு நல்ல தலைவனை கொடு... தமிழகமே!!
உள்ளவர்கள் பிடியில் இருந்து உன் மக்களை மீட்டெடு... தமிழகமே!!
பிஞ்சு குழந்தையை காப்பாற்ற வக்கற்றவர்கள் நாடாக உன்னை மாற்றி விட்டார்கள்...தமிழகமே
உன் மக்களை அவர்கள் பிடியில் இருந்து எப்போது மீட்பாய்... தமிழகமே!!
நல்ல தலைவனை எதிர்பார்த்து இருக்கிறோம்... தமிழகமே!!
அதுவரை உன் மக்களை காக்க போராடும் ஒரு சிலரை பார்த்துக்கொள்... தமிழகமே!!