தீபம்

தன்னை உருக்கி
இருளைப் போக்கும்

வெண்பனிக் காலத்தில்
மின் மினியாய் ஜொலிக்கும்

இறைவன் வகுத்த வஞ்சனை உலகில்
பாதி பகல் இருள் சூழ்ந்த நாட்டில்

மனிதன் சித்தத்தால் உருவான ஒளியில்
உடலும் உள்ளமும் உற்சாகம் பெற்றிடும்

உயர்ந்தவன் வீட்டில் அடிக்கொரு தீபம்
ஏழை வீட்டில் ஏந்தியொரு தீபம்

விடியலை வேண்டி நாடே எரிந்தபோது
விடுதலை வேண்டி வீட்டுக்கொரு தீபம்

கார்த்திகை மாதத்து கனக்கும் பொழுதுகளில்
தீபமாய் ஒளிர்கிறது நம் தியாகிகள் வீரம்

மங்காது மங்காது தீபச் சுடர்கள்
நீங்காது நீங்காது தீப அலைகள்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (31-Oct-19, 10:57 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : theebam
பார்வை : 4402

மேலே