நட்பு 🤝

நட்பு 🤝

அன்பு நண்பா
உன்னை பிரிந்து
அப்படி, இப்படி என்று
இருபது வருடம் ஓடிவிட்டது.

நம் நட்பு இந்த உலகத்துக்கே எடுத்து காட்டு.
சைக்கிளில் நான் செல்ல
வேகமாக என் பின் வந்த லாரி ஏன்னை தட்டிவிட
பலத்த காயங்களுடன் தூக்கி எறியப்பட்டேன்.
உயிருக்கு போராடிய என்னை மருத்துவமனையில் சேர்ந்து
பின் எனக்கு ரத்தம் கொடுத்து பிழைக்க வைத்தது நீ தானே என் ஆருயிர் நண்பா.
அன்று ஆரம்பித்த நட்பு இன்று வரை தொடருகிறது.

நாம் இருவரும் இளமை காலத்தை அனுபவித்தது போல் யாராவது அனுபவித்து இருபார்களா என்பது மிகவும் சந்தேகம் தான்.
பள்ளி படிப்பை முடித்து ஒரே கல்லூரியில் சேர்ந்தோம்.

சிறகடித்து பறந்தோம்
ஆடிப்பாடி மகிழ்தோம்
சிறப்பாக படித்தோம்
கல்லூரி வாழ்க்கை திருவிழா என கொண்டாடினோம்.

நீ காதலித்த பெண்னை
நீ கரம் பிடிக்க
நான் பட்ட சிரமங்கள் நிறைய.
பெண் வீட்டாரிடம் நான் வாங்கிய திட்டுக்கள் ஏராளம். ஏராளம்.
எப்படியோ இருவீட்டாரையும் சம்மதிக்க வைத்து உன் திருமணம் ஏக போகமாக முடிந்தது.

வெவ்வேறு நிறுவனங்களில் நாம் இருவருக்கும் வேலை கிடைக்க
முதலில் அது மிகவும் வேதனையாக இருந்தது.
வார இறுதி எப்போது வரும், எப்போது சந்திப்போம், என்று ஏங்கிய நாட்கள் அவை.
மிகவும் சுவாரசியமான நாட்கள்.

எனக்கு நல்ல பணி கிடைத்ததே தவிர்த்து நல்ல வரன் அமையவில்லை.
நீயும் ஜாதகம், தோஷம், பரிகாரம், என என்னென்னவோ செய்தும் பலன், எனக்கு திருமணம் பாக்கியம் கிட்டவில்லை.

முப்பது வருட நட்பை நாம் சிறப்பாக கொண்டிய அன்று, உனக்கு அரபு நாடுகளில் வேலை செய்ய அழைப்பு வர
நான் முதலில் கலங்கி போனேன். நீ போகவே மாட்டேன் என்று அழுது புலம்பி விட்டாய்.

முதலில் நீ அரபு நாட்டுக்கு தனியாக சென்றாய்.
சில வருடம் கழித்து உன் குடும்பத்தாரும் உன்னுடன் பயணபட்டனர்.
காலம் நமக்கு எதிராக சதி செய்ய தொடங்கியது.

கடிதம், தொலைபேசி மூலமாக பல வருடம் அன்பாக பரஸ்பரம் விசாரித்து கொள்வொம்.
கடைசியாக உன்னை நான் பார்த்தது உன் தகப்பனார் இறந்த போது தான்.
படிப்படியாக நம் கடித போக்குவரத்தும் குறைந்து விட்டது.
தொலைபேசி பேச்சும் இல்லாமல் போய்விட்டது.

இப்போது நீ எந்த நாட்டில் உள்ளாய்.
சமுக வளைதளங்களில் சல்லடை போட்டு உன்னை தேடினேன்.
நீ கிட்டவே இல்லை.
உன் கைபேசி எண் என்ன.
தாயகம் திரும்பி வேறு மாநிலத்தில் உள்ளாயா
உன் ஒரே மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதா
என் தங்கை எப்படி உள்ளார்கள்.
இப்படி நிறைய உன்னை பற்றிய கேள்விகள் என் மனம் எழுப்பி கொண்டே இருக்கிறது.
நண்பா எங்கே உள்ளாய்.
உன்னை காண என் மனம் ஏங்குகிறது.
ஒரே ஒரு முறையாவது உன் குரல் கேட்டுவிட மாட்டோமா என்று மனம் துடிக்கிறது.

ஏறகுறைய எழுபது வயதை தொடும் நான்
இன்று வரை கட்டை பரம்மச்சாரி.
ஏனோ எனக்கு திருமணம் பாக்கியம் அமையவில்லை .
அது குறித்து பெரிதாக வருத்தப் பட்டது இல்லை.
எனக்கு இருந்த ஒரே சொந்தம் என் தாய் தான்.
அவர்களும் சென்ற வருடம் என்னை விட்டு பிரிந்துவிட்டார்கள்.
எனக்கென்று உறவுகள் யாரும் இல்லாமல் தனிமரமாக ஆகிவிட்டேன்.
தனிமை மிகவும் கொடுமை.

இனி நான் சாதிக்க இவ்வுலகில் என்ன உள்ளது.
ஏதும் இல்லை.
நான் தினம் ஆண்டவனிடம் வேண்டுவது
என்ன தெரியுமா
என் நண்பனை என் கண் முன்னே நிறுத்தி விடு என்று தான்.
என் சுவாசம் நிற்கும் முன்பு நான் உன்னை காண்பேனா
அது ஆண்டவன் கையில்....
உன்னையே நினைத்து
நாம் பழகிய அந்த பசுமையான நினைவகளுடன்
உன் நண்பன்.
- பாலு.

எழுதியவர் : பாலு (4-Nov-19, 11:40 pm)
சேர்த்தது : balu
பார்வை : 1364

மேலே