வா நண்பா வா 🤝👍🙏🏽

வா நண்பா வா 💪🤝👍🙏🏽

முகிலினமே உனக்கு ஓர் நற்செய்தி.
பெளர்ணமி நிலவே உனக்கு ஓர் அற்புதமான செய்தி.
ஜொலிக்கும் நட்சத்திர கூட்டமே உங்களுக்கு ஓர் அபாரமான செய்தி.
வண்ண மலர்களை தீண்டும் தென்றலே உனக்கு ஓர் மகோன்னத செய்தி.
மாலையில் பூக்கும் மல்லிகை பூவே உனக்கு ஓர் அளப்பறிய செய்தி.
ஓயாமல் கரையோடு விளையாடும் கடல் அலைகளே உங்களுக்கு ஓர் அருமையான செய்தி.

என் கரம் பிடித்து,
என் கண்ணீர் துடைத்து,
என் வறுமை போக்க வழி செய்து
என் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றி வைத்த அன்பு கரம்.
என் வாழ்க்கையின் விடிவெள்ளி.
என் முன்னேற்றத்தின் படிகட்டு.
என் இளமை கனவுகளை அத்துனையும் சாத்திய படுத்திய நம்பிக்கை நட்சத்திரம்.
என் மதி தடுமாறும் போது திசை மாறாமல் பயணிக்க வைத்த கலங்கரை விளக்கம்.
என் வாழ்க்கையின் வசந்தம்.
என் இதய துடிப்பு
என் சுவாசம்
என் உயர்
என் 'நண்பன்' வருகிறான் என்னை காண.
தேரோட்டம் ஆரம்பம்.
திருவிழா கோலாகலம்
மகிழ்ச்சி பெருவெள்ளம்
ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம்
ஆனந்தம், பேரானந்தம்.

- பாலு

எழுதியவர் : பாலு (5-Nov-19, 1:41 pm)
சேர்த்தது : balu
பார்வை : 834

மேலே