பேரழகி

அவ்வளவு அழகியா நீ?
எதிர்படும் யாவரிலும்
உனை பொருத்திப்பார்க்கிறேனே..
சிறியதாய்த்தான் புன்னகைக்கிறாய்
வசந்தகாலத்திற்கு
அதுவே போதுமானதாகிறதடி..
உனக்கென தனிவாசம்..
அதனால்
மல்லிகையும் முல்லையும்
தினமும் தோற்கின்றன..
உன் நிழல் கூட
நேசிக்க வைக்கிறதடி..
மன்னிக்கவும்
நீ அறியாமல்
உன் நிழலினை
முத்தமிட்டுவிட்டேன்...

எழுதியவர் : Rafiq (5-Nov-19, 8:39 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : peralagi
பார்வை : 590

மேலே