கண்ணால் காமம் பெருகி

கண்ணால் காமம் பெருகி
பெண்ணுள் கருவாய் ஆகி
மண்ணால் செய்த பொம்மையாய்
மழலையது உருவாகி மாற்றங்கண்டு

மனதிற்கு பிடித்ததை தின்று
மழலையை செழித்து வளர்த்து
எழிலான நிகழ்வினால் குதுகலித்து
எங்கும் நட்பு சூழ இன்பங்கண்டு

வளர் நிலவாய் மாற்றமடைந்து
குளிர் தருவாய் தாயும் இருக்க
குழவியதுவும் குட வயிற்றினுள்ளே
குத்துக்காலோடே நறுந்தவமெய்து

பத்தமாதத்தில் முழுவுறுவமாகி
பெறுபவளுக்குச் செம்மை வலியையாக்கி
பனிக்குடம் உடைத்து புதுவுலகு காண
பக்குவுமாய் கழிவுறுப்பில் பிறந்தோம்

கழிவுறுப்பில் உதித்ததால்
இழிகுணங்கொண்டு இம்சைக்கண்டு
எல்லோரையும் தூற்றி பெருந்துன்பம் செய்து
இயங்கும் நாம்தான் உலகின் மானிடர்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Nov-19, 2:40 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 146

மேலே