உழைப்பாளி 💪

உழைப்பாளி 💪

கிடப்பில் கிடக்கும் துரு பிடித்த இரும்பு அல்ல.
தன் உடல் தேய்ந்து மணம் பரப்பும் சந்தனம்.
அவன் சிந்திய வியர்வை மணி துளிகள் அது
முதலாளி மனைவி கழுத்தில் மின்னும் வைரத்தோடு.
சுத்தியலால் அவன் அடிக்கும் ஒவ்வொரு அடியும்
முதலாளித்துவத்தின் முன்னேற்ற படிகள்.
தினம் இரும்பை பிடித்து உழைத்தவன் கைகள் காப்புகாய்த்துவிட்டது.
தங்க காப்பு கையில் அனிந்ந வண்ணம் அதிகார வர்க்கம் அவனை அதட்டுகிறது.
இளைத்தன் என்றுமே இங்கே குடிசையில்.
பலசாலி என்றும் இங்கே மாட மாளிகையில் கூட கோபுரத்தில்
உழைப்பவன் ஏமாளி.
ஏச்சு பிழைப்பவன் திறமைசாலி.
இது தான் ஜனநாயகம்.
யாரோ எழுதி வைத்ததை மூளையில் குப்பையாக சேமித்து வைத்திருப்பவன் அறிவாளி.
இயற்கையை சார்ந்து வாழ்க்கை நடத்திய உலகின் முதல் தொழிலாளி (விவசாயி)
இங்கே முட்டாள்.
எல்லாம் வெள்ளி பணம் செய்யும் அட்டகாசம்.
உண்மை ஒரு நாள் வெளிபடும்
அப்போது தெரியும் இந்த உலகம் சாமனியன் செய்த அரிய பெரிய பொக்கிஷம் என்று.

- பாலு.

எழுதியவர் : பாலு (13-Nov-19, 5:57 pm)
சேர்த்தது : balu
பார்வை : 2332

மேலே