மின்னல் குழம்புகள்

மின்னல் குழம்புகள்
================================================ருத்ரா

படபடக்கும் உன் இமைமயிர்கள்
கிச்சு கிச்சு மூட்டியதில்
பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள்
சத்தமில்லால்
சிரித்து சிரித்து உதிர்ந்தன.
பிக்காசோகள் பொறுக்கியது போக‌
எனக்கு இரண்டு இறக்கைகளே மிச்சம்.
அதில் கூட
உன் விழிகள் கசிந்த மின்னல் குழம்புகளே
என் "கவிதைத் தொகுதிகள்"

=================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (21-Nov-19, 10:34 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 166

மேலே