காத்திருக்கிறேன் வழிமேல் விழியுடன் 555

என்னவளே...


உனக்கு நினைவு
இருக்கிறதா...

நான் உன் முகம் பார்த்து
சொன்ன காதலை...

இன்று நீ இல்லாமல்
தவிக்கிறேன் நான் மட்டும்...

ஒவ்வொரு நாளும்
எழுகிறேன் நம்பிக்கையுடன்...

உன்னை
எப்படியும் சந்திப்பேனென...

உன்னை நேசித்த
நிமிடம் நினைவில்லை...

ஒவ்வொரு நொடியும் உனக்காகவே
நான் வாழவேண்டுமடி...

உனக்காகவே நான்
காத்திருக்கிறேன்...

கைகளில் மலர்களுடனும்
சாலையில் விழிகளுடனும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Nov-19, 8:37 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2556

மேலே