காதல் சொல்ல வந்தேன்-19

காதல் சொல்ல வந்தேன்-19
விடியும் பொழுதுகள் மீது காதல்
உன்னை பார்க்க இருப்பதால்
போகும் பொழுதுகள் மீது கோபம்
எனக்கெதிராய் சதி செய்வதால்
உன்னை பார்ப்பதற்கு முன் எனக்கு
இதுதெரியவில்லை
பார்த்த பின்னோ காலம்போனது
தெரியவில்லை
வேகமாக போகுமோ காலம் என என்னையே கேட்டுக்கொண்டேன்
இனிமையான அனுபவங்கள் தரும்
இந்த காதலில்
உன் நினைவுகள் மட்டும் நெஞ்சில்
நிற்பதால்
வேறெதுவும் மனதில் பதிவதில்லை
காரணம் உன்னை எனக்கு ரொம்ப
பிடிக்கும்