பேஸ்புக்......!

தெரியாத உள்ளங்களை
அறிமுகம் செய்தாய்
தொலைத்த உறவுகளை
தேடித் தந்தாய்
பகைத்த நெஞ்சங்களை
சேர்த்தும் வைத்தாய்
பிரியாத உறவுகளை
பிரித்தும் வைத்தாய்
நீ தேவைதானா....???
விழுந்து சிரித்த
விமர்சனங்களும்
கொதித்தெழுந்த
விமர்சனங்களும்
சிந்திக்க வைத்த
விமர்சனங்களும்
உன்னிடம் இருந்து
ஏராளம் ஏராளம்
நீ தேவைதானா....???
அகமறியாது
முகந்தனை
மட்டும் கண்டு
உளமதை பறிகொடுத்த
எத்தனை
பைத்தியக்காரர்கள்
உன்னாலே
நீ தேவைதானா.....???
ஒவ்வொரு
மனங்களினதும்
உள்ளக்கிடக்கைகளை
பச்சையாய் படம்பிடித்து
உலகத்துக்கு கதைசொன்ன
சூட்சுமக்காரன் நீ
நீ தேவைதானா.....???
சில
சில்மிஷக்காரர்களினால்
நட்புக்குள் குழப்பம்
குடும்பத்தில் சச்சரவு
காதலில் சந்தேகம்
அப்பப்பப்பா......!
முகப்புத்தகமே
இத்தனை
பிரச்சனைகுள்ளும்
நீ தேவைதானா???