நீ தான் வேண்டும்
மேனி அழகில் அறுசுவை
படைக்கும் விருந்தானாய்
நற்பண்புகளை மெல்கையில்
சுவைக்கும் கரும்பானாய்
இரவின் கணங்களை விழுங்கி
ஏப்பம் விடுகிறதே
உந்தன் ஞாபகங்கள்
என் நெஞ்சத் தசையை
அசைத்து வசைத்து உன்னிடம்
கொத்திச் சென்றதடி காதல் கழுகு
புண்பட்டுத் தவிக்கும் என் நெஞ்சகம்
நோவினைக்கு மருந்தாக
நீ தான் வேண்டும்
உடனே எழுந்து வா கண்ணே
அஷ்றப் அலி