எல்லாமே கேடு

மாடு கறந்ததைப் போலே
மருந்தால் உருவான பாலு
மனித மிருகம் அதனை
ருசித்து குடிப்பதைப் பாரு.

மரத்தில் பழுத்ததைப் போலே
மாமரத்து பழத்தைப் பாரு
மருந்தால் பழுத்த பழத்தை
மகிழ்ச்சியாய் உண்பதைப் பாரு.

இஞ்சிக்கிழங்கு என்றும்
நஞ்சை முறிக்கும் மருந்து
விளைச்சல் செழிக்க இன்று
வேதியியல் மருந்தால் விளையுது பாரு.

கோழி வளர்ப்பில் கூட
கொடூர உயிர்க் கொல்லும் மருந்து
கொடுத்து வளர்க்கும் கறியை
குதுகளிப்பாய் உண்ணுது மனிதவிலங்கு.

எல்லா உணவிலும் நஞ்சு
எவ்வழியிலேனும் புகுந்துக் கொண்டு
எண்ணிலா துயரை கொடுத்து நின்று
எடக்கு முடக்காகுது வாழ்வை இன்று.
---- நன்னாடு.

எழுதியவர் : நன்னாடன் (10-Dec-19, 9:33 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ellaame ketu
பார்வை : 38

மேலே