மலையாய் காட்சிதரும் மலையப்பன் , மற்றும் அண்ணாமலையார்
வட வேங்கடத்தில் மலை ஏழாய்
ஒவ்வொரு மலையும் தன்னுருவாய்
ஏழு மலையும் தானாய் உறைகின்றான் மலையப்பன்
மாலவன் வேங்கடவனாய் ஏழுமலையானாய்
இருந்து நம்மை எல்லாம் ரட்சிக்கின்றான் ஏழுமலையான்
கோவிந்தா என்று கூவி அழைத்தால் நம்
வினைகளெல்லாம் தீர்ப்பான் ஸ்ரீனிவாசன்
வாருங்கள் வேங்கடம் செல்வோம் சென்று
அவன் தாள்பற்றி சேவிப்போம் நம் வினைகள் தீர
திருவண்ணாமலையில் ஆதி அந்தம் இல்லா
அருட்ஜோதி லிங்கஸ்வரூபன் சிவனவன்,
மலையே ஜோதியாய் ஜோதியே மலையாய் ,
மனமுருகி பாடி வேண்டுவாருக்கு நித்தம்
ஜோதிலிங்கமாய்க் காட்சி தருகின்றான் இன்று
உலகோருக்கெல்லாம் கார்த்திகை ஜோதியாய்
காட்சி தருவான் அவனே வாருங்கள் கண்டு
தரிசிப்போம் பிறவிப் பிணி நீங்க