தைரியம் 💪
தைரியம்💪
உன்னை விட்டால் எனக்கேது வேறு வழி.
உன்னை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
நீயே உத்தமம்.
நீயே உத்வேகம்.
பயம் என்னை நித்தம் சாகடித்தது.
கலவரபட்ட என் மனதில்
நீ என்னுள் தீயாய் இறங்கினாய்.
கலக்கம் நீங்கியது.
இருள் விளகியது.
பதற்றம் பறத்து போனது.
தெளிவு வந்தது.
வெளிச்சம் பிறந்தது.
யானை பலம் வந்தது.
தெளிந்த நீரோடை
இனி என் வாழ்க்கை.
இனி என்னை அசைக்க யாராலும் முடியாது.
இனி இந்த உலகத்தில் எனக்கென்ற இருக்கும் இடத்தை நிச்சயம் அடைந்தே தீருவேன்.
பயமே!
உன்னை உருவாக்கியது யார்?
உனக்கு உருவகம் கொடுத்தது யார்?
உன்னை மானுட வாழ்வியலில் பயணிக்க செய்தது யார்?
நான் ஒரு முட்டாள்.
இன்னமும் உன்னை பற்றிய ஆராய்ச்சி எனக்கெதற்கு.
தைரியமே!
என் ஆதாரமே!
உன்னை முத்தமிட்டு கேட்கிறேன்,
தயவுசெய்து என்னுடன்
என் மரணம் வரை பயணிக்க வேண்டும்.
என் பல கனவுகளை நினைவாக்குவேன்.
சாதனை நிறைய படைப்பேன்.
துணிவே துனை.
- பாலு.