குதுகலமாகி புது பலம் பெற்று

நிலமும் மரமும் நீண்ட ஆறும்
உடலில் தெம்பும் உறுதி எண்ணமும்
தெளிந்த அறிவும் திடமான சிந்தனையும்
பரிதியும் முகிலும் பாரம்பரிய முறையும்
பின்பற்றி தமிழர் பயிரிடும் நிலையால்
உருவாகும் உணவை உறுதியாக உண்டால்
குப்பையாய் உடலில் உலாவும் குருதி
குதுகலமாகி புது பலம் பெற்று
அதிபதியான அன்பான உடலை
அழகுற நடத்தி ஆயுளை பெருக்கி
அகிலத்திற்கு நன்மையைச் செய்யத் தூண்டி
அற்புதம் செய்யும் ஆற்றலாய் மாறும்
உணவே மருந்து மருந்தே உணவு
என்பதைப் போற்றி எண்ணத்தில் ஏற்றி
எந்நாளும் நம்முடைய வாழ்வை வாழ்வோம்.
---- நன்னாடன்.